மறை ஞானம்

Sunday, July 31, 2011

காணும் பொருட்களில் ஒன்றாவாது எமக்கு
போதி மரம் ஆகாதாவென்று
போதும் பொழுதும் - நானும்
நண்பனும் அலைந்து திரிந்தோம்

காற்று வீசிடும் கடற்கைரையில்
வானில், ஒரு சிறுவன்
காற்றாடி விட்டுச் சென்றான்


'காற்றிலாடிடுமக் காற்றாடி
ஞானம் உரைக்கிறோ..?'
விசாரித்திட்டேன் நண்பனிடம்.
மறுத்துரைத்தான்
'காற்று அடிப்பதனால் பறக்கிறது...
இதில் எங்குள்ளது மறைஞானம்...'

பலத்த காற்று வீசியதில்
காற்றாடி சிக்கிக்கொண்ட கணத்தில்
எண்ணங்களும்
வார்த்தைகளும்
காற்றாடியும்
ஆயின
என் போதி மரமாய்.