புலன்வெளி

Tuesday, December 7, 2010

ஓளியின் கீழ் நின்றிருந்தேன்
பாதி தெரிந்தது
மாய இருளில் நின்றிருந்தேன்
முழுமையும் தெரிந்தது
உங்களில் எத்தனை பேர் மாய இருளில்

மழைக்கு பயந்து குடையை விரித்தேன்
குடையுடன் குறுகியது என்னுலகம்
மழையில் கலக்க குடையை சுருக்க
விரிந்தது கையில் என்னுலகம்
உங்களில் எத்தனைபேர் மழையில்;

கண்திறந்து பார்த்தேன்
திரைகளைக் கடக்க மறுத்தது பார்வை
கண்மூடினேன்
திரைகள் தாண்டி சென்றன புலன்கள்
உங்களில் எத்தனை பேர் புலன்வெளியில்