மறை ஞானம்

Sunday, July 31, 2011

காணும் பொருட்களில் ஒன்றாவாது எமக்கு
போதி மரம் ஆகாதாவென்று
போதும் பொழுதும் - நானும்
நண்பனும் அலைந்து திரிந்தோம்

காற்று வீசிடும் கடற்கைரையில்
வானில், ஒரு சிறுவன்
காற்றாடி விட்டுச் சென்றான்


'காற்றிலாடிடுமக் காற்றாடி
ஞானம் உரைக்கிறோ..?'
விசாரித்திட்டேன் நண்பனிடம்.
மறுத்துரைத்தான்
'காற்று அடிப்பதனால் பறக்கிறது...
இதில் எங்குள்ளது மறைஞானம்...'

பலத்த காற்று வீசியதில்
காற்றாடி சிக்கிக்கொண்ட கணத்தில்
எண்ணங்களும்
வார்த்தைகளும்
காற்றாடியும்
ஆயின
என் போதி மரமாய்.


சுவடுகள்

Thursday, June 30, 2011

அலைமோதும் கடற்கரை
மணல்மேடைதனில்
அவனும் பின்னே இவனும் 
நடந்துசென்றார்கள்
மணலில் அவன் விட்டுவந்த 
பாதச்சுவடுதனை
பின்னே வந்த இவன்
அழித்துசென்றான்
அவன் அமைதியாய் 
அதிலொரு குறிப்பறிந்தான்
பின்வந்த இவனின் 
சுவடுகளை
அலைகள் மோதி 
அடித்துச் சென்றுகொண்டிருந்தன...

ஒரு விளக்கு

Thursday, May 12, 2011

ஊர் ஓரத்தில் ஒரு விளக்கு - கண்
மூடும் மூட இருள் விலக்கும் - இருளிற்கு
ஔிசொல்லும் அவ்விளக்கு  - கொஞ்சம்
ஔியிலும் ஔிர விரும்புகிறேன் - தன்னையது
அப்போதாவது பாரத்துவிட...

மன்மத தகனம்

Sunday, February 13, 2011

வார்த்தைகளின் வேகம் உதட்டில் தெறித்தன.
காதில் விழுந்த ஓசைகள்

வழக்கம் போல தேவலோகத்தில் விவாதம்.
கதை ஒன்று
பாத்திரங்கள்  வேறு
யார் பெரியவனென்ற சண்டை தொடங்கியது
மன்மதனுக்கும் சிவனுக்கும் இடையே

'உன்னை பார்வையில் எரித்தேன்', என்றான் சிவன்
மன்மதன் உரைத்தான் 'இருந்தும் உம்மை வென்றேன்..'

பிரம்மாவும் விஷ்ணுவும் சாட்சிகளாகினர்
'நான் அடியைக் கண்டேன்..'
என்று பிரம்மா
'நானும் முடியைக் கண்டேன்..'
என்று விஷ்ணு

பொய்மையோடு
மன்மதனின் பக்கம் ஓங்கி வந்தது
வாய்மையோடு
தேவனின் பக்கம் தாழ்ந்து சென்றது

இந்திரன் 'சிவன் பிச்சை எடுத்தான்..'
சனி 'நான் அவனை பிடித்தேன்..'
என்றான்..
'இவன் பித்தன்..','பேய்களுடன் ஆடுபவன்..'
குரல்கள் ஓங்கி ஒலித்தன..
கோபம் பொறுமையின் எல்லை கடந்தது...
நெற்றிக் கண் கனல் எரிந்தான்
மன்மதன் முற்றாய் அழிந்தான்
மீட்பின்றி.

மீட்பின் வழியறியா தேவன்
தனிமையில் வீழ்ந்தான்
பாவம் தேவன்.
தேவியும் தான்.